பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
மிக்ஜாம் புயலால் கடந்தவாரம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பொழிந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பல இடங்களில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில், சின்னத்திரை ஷூட்டிங்கிறாக போடப்பட்ட பல சீரியல்களுக்கு தேவையான செட்டுகளும் சேதம் அடைந்துள்ளன. பாண்டியன் ஸ்டோர்ஸ், இலக்கியா, கனா காணும் காலங்கள் என பல்வேறு ஹிட் தொடர்களின் ஷூட்டிங் நடைபெறும் இடங்களில் கனமழையால் ஏற்கனவே போடப்பட்டிருந்த வீடு, கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் என பல செட்டுகள் சேதாரமடைந்துள்ளன. இதை சரி செய்யவே 10 நாட்கள் ஆகும் என்பதால், இந்த செட்டில் நடக்க வேண்டிய சீரியல்களின் ஷூட்டிங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.