கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! |

தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் என்பதையும் மீறி, இந்திய சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் என மற்ற மொழி நடிகர்களாலும் பாராட்டப்படுபவர் ரஜினிகாந்த். அவர் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 50வது ஆண்டில் அவர் நடித்துள்ள 'கூலி' படம் இந்த வாரம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.
அவர் நடித்த முதல் படமான 'அபூர்வ ராகங்கள்' படம் ஆகஸ்ட் 15, 1975 அன்று வெளிவந்தது. சரியாக 50 வருடம் முடியும் நாளன்று 'கூலி' படம் வெளியாக உள்ளது. ரஜினியின் முதல் படமான 'அபூர்வ ராகங்கள்' படம் சென்னையில் மிட்லேண்ட், அகஸ்தியா, ராக்ஸி, கிருஷ்ணவேணி ஆகிய தியேட்டர்களில் வெளியானது. அதில் தற்போது கிருஷ்ணவேணி தியேட்டர் மட்டுமே இருக்கிறது. மற்ற தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டது.
சென்னை, தியாகராய நகர், பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள கிருஷ்ணவேணி தியேட்டரில் ரஜினியின் 50வது ஆண்டு திரைப்படமான 'கூலி' படமும் வெளியாக உள்ளது. இத்தனை வருடங்களாக அந்தத் தியேட்டர் இருந்து வருவதும் அதில் இந்திய சினிமாவின் முக்கிய நடிகரான ரஜினியின் முதல் மற்றும் ஐம்பதாவது வருடப் படங்களும் வெளியாவது சிறப்பானது.
சென்னையைத் தவிர மற்ற ஊர்கள் ஏதாவது ஒன்றிலும் இப்படியான வெளியீடு இருக்க வாய்ப்புள்ளது. அப்படி இருந்தால் அந்த ஊர்க்காரர்கள் கமெண்ட்டில் பகிரவும்.