இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்கிறார். இது குறித்த வேலைகள் தற்போது மும்பையில் நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பும் கூட தற்போது துவங்கிவிட்டது என்று சொல்லப்பட்டாலும் அது குறித்த தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்பு நடிகர் அல்லு அர்ஜுன் மும்பை சென்று விட்டு படம் குறித்த பணிகளில் கலந்துகொண்டு நேற்று (ஆக.,9) காலை தான் மும்பையில் இருந்து ஹைதராபாத் திரும்பியுள்ளார். மும்பை விமான நிலையத்தில் அவர் உள்ளே நுழையும் போது முகத்தில் மாஸ்க்கும் கண்களில் கருப்பு கண்ணாடியும் அணிந்தபடி தனது டிக்கெட்டை காட்டி உள்ளே நுழைய முயற்சித்தார்.
ஆனாலும் பாதுகாப்பு அதிகாரி அவரது முக அடையாளத்தை காட்டும்படி கேட்டுக் கொண்டதால் வேறு வழியின்றி முதலில் கண்ணாடியை கழற்றிய அல்லு அர்ஜுன், அதுவும் போதாதா என்று கேட்கும் விதமாக வேகமாக தனது மாஸ்கை கழட்டி காட்டி பிறகு அதை மீண்டும் அணிந்து கொண்டார். அதன் பிறகு அதிகாரிகள் அவரை உள்ளே செல்ல அனுமதித்தனர். இது வழக்கமான நடைமுறை தான் என்றாலும் அல்லு அர்ஜுன் என்ன, யாராக இருந்தாலும் மாஸ்க், கண்ணாடி அணிந்தால் அவர்கள் முழு உருவம் யாருக்கும் சரியாக தெரியாது என்பதாலும் தான் இந்த சோதனை என்றாலும் அல்லு அர்ஜுன் இதனால் சற்றே கோபமானார் என்பது அந்த வீடியோவை பார்க்கும் போது தெரிகிறது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.