தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
இந்திய அரசியல்வாதிகள் பலருடனும் நட்புடன் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் நடித்துள்ள 'கூலி' படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளது. ரஜினி சினிமாவில் நடிக்க வந்து 50 வருட நிறைவில் இப்படம் வெளியாகிறது. அதற்காக ரஜினியின் நெருங்கிய நண்பரான ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் ஆந்திர மாநில அமைச்சருமான நர லோகேஷ் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“ரஜினிகாந்த் சார், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில், ரஜினி-யுகத்தில் நாமும் ரசிகர்களாக வாழ்வதை பாக்கியமாக உணர்கிறேன். எங்கள் குடும்பத்தின் இருண்ட காலத்தில் அவரது அசைக்க முடியாத ஆதரவை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். கூலி குழுவுக்கு மாபெரும் வெற்றி வாழ்த்துகள்,” என தனது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவில் 'கூலி' படத்தின் முன்பதிவு இன்னும் ஆரம்பமாகவில்லை. அங்கு டிக்கெட் கட்டண உயர்வுக்கான அரசாணைக்காகக் காத்திருக்கிறார்கள். கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களைப் போலவே ஆந்திரா, தெலுங்கானாவிலும் இப்படத்திற்கான முன்பதிவு சிறப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.