சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? |
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் பிரபல இளம் முன்னணி நடிகர் உன்னி முகுந்தன். மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழில் கருடா, தெலுங்கில் பாகமதி, யசோதா உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர். கடந்த மாதம் இவரது நடிப்பில் வெளியான மார்கோ என்கிற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது. இந்த நிலையில் இவரது அடுத்த படமாக வெளியாக தயாராகி வருகிறது 'கெட் செட் பேபி'.
இந்த படத்தை மோகன்லாலின் தயாரிப்பு நிறுவனமான ஆசீர்வாத் சினிமாஸ் வெளியிடுகிறது. தொடர்ந்து மோகன்லால் நடித்து வரும் படங்களை மட்டுமே தயாரித்து வெளியிட்டு வரும் ஆசீர்வாத் சினிமாஸ் முதன்முறையாக இன்னொரு நடிகரான உன்னி முகுந்தன் படத்தை வெளியிடுவது ஆச்சரியமான விஷயம் தான். ஆனால் அதற்கு சமீபத்தில் உண்மை முகுந்தனின் மார்கோ திரைப்படம் பெற்ற மிகப்பெரிய வெற்றியும் பாலிவுட்டில் அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.