ஆண்களை மட்டுமே தப்பு சொல்லக் கூடாது! ரவி மோகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை மீரா சோப்ரா! | ராகவா லாரன்ஸ், அஜய் ஞானமுத்து புதிய கூட்டணி | ஜூனியர் என்டிஆரின் 43வது பிறந்தநாள்: ரசிகர்கள் தள்ளுமுள்ளு! | மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா! | சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் ஆரம்பித்த ரவி மோகன்! | சூர்யா, த்ரிஷாவுக்கு நிம்மதியை கொடுத்த ‛கருப்பு' வெற்றி | கேன்ஸ் திரைவிழாவில் தாழ் திறவா | ராம் பொதினேனி படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா | நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்? | ‛இம்மார்ட்டல்' படப்பிடிப்பு நிறைவு |

ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் ஹீரோவாக நடிக்கும் 'ஹரிஹர வீரமல்லு' படம், ஜூன் 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் ரிலீஸ் ஆகும் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் சமீபத்தில் பிரமாண்டமாக நடந்துள்ளது. இசையமைப்பாளர் கீரவாணி, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், ஹீரோயின் நிதி அகர்வால் உட்பட பலர் கலந்து கொண்டாலும், ஹீரோவான பவன் கல்யாண் ஏனோ கலந்து கொள்ளவில்லை.
அவர் அரசியலுக்கு போனதால் படப்பிடிப்பு வேலைகள் தடைப்பட சில ஆண்டுகளாக இந்த படம் உருவாகி வருகிறது. முதலில் படத்தை இயக்கிய கிரிஷ் வேறு படத்துக்கு செல்ல, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மகன் ஜோதி கிருஷ்ணாவே மீதி படத்தை முடித்துள்ளார். தனது பிஸியான பணிகளுக்கு மத்தியில் சில நாட்கள் மட்டுமே பவன் கல்யாண் தேதிகளை வழங்க, கிரிக்கெட் போட்டி மாதிரி பல கேமரா வைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். ஆனாலும், சில கோடி செலவு செய்து நடத்தப்பட்ட விழாவுக்கு ஹீரோ தனது அரசியல் பணிகள் காரணமாக வராதது படக்குழுவை வருத்தமடைய செய்துள்ளது.