ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற காந்தாரா திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத். தமிழில் குரங்கு பொம்மை, மகாராஜா உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் தெலுங்கிலும் ஓரிரு படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் மலையாளத்தில் தற்போது உருவாகி வரும் கட்டாளன் என்கிற படத்திற்கு இசையமைப்பதன் மூலம் மலையாள திரை உலகிலும் அடி எடுத்து வைக்கிறார் அஜ்னீஷ் லோக்நாத். பால் ஜார்ஜ் என்பவர் இந்தப்படத்தை இயகுகிறார்.
அங்கமாலி டைரீஸ், ஆர்டி எக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்ற ஆண்டனி வர்கீஸ் கதாநாயகனாக நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்ற மார்கோ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஷரீப் முகமது தான் இந்த படத்தை தயாரிக்கிறார். மார்கோ படத்தில் கேஜிஎப் இசையமைப்பாளரான ரவி பர்சூரை அழைத்து வந்து இசையமைக்க வைத்த இவர், தற்போது அடுத்த அதிரடியாக காந்தாரா பட இசையமைப்பாளரை மலையாள திரையுலகிற்கு அழைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.