ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
மலையாள திரையுலகில் கடந்த வருடம் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி, நடிகைகள் உள்ளிட்ட பெண்கள் பலர் பாலியல் ரீதியாக தொந்தரவுக்கு ஆளாகின்றனர் என்கிற விஷயத்தை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து பல பிரபலங்கள் இந்த குற்றச்சாட்டில் சிக்கினர். ஒருவழியாக அது அடங்கிய நிலையில் கடந்த சில மாதங்களாக மலையாள திரையுலகில் போதை பொருள் பழக்கம் அதிகரித்து வருகிறது என்கிற புதிய குற்றச்சாட்டு எழுந்தது. இதில் பிரபல வில்லன் நடிகர் உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள், இயக்குனர்கள் சிக்கி கைதான சம்பவமும் நடந்தது. இந்த நிலையில் இப்படி போதைப் பொருள் பயன்படுத்துவதற்கு என்று படத்தின் பட்ஜெட்டில் சிறப்பு தொகை ஒன்று ஒதுக்கப்படுகிறது என ஒரு பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார் பிரபல தயாரிப்பாளர் சான்ட்ரா தாமஸ்.
மலையாள திரைகளில் தொடர்ந்து படங்களை தயாரித்து வரும் இவருக்கும் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள சிலருக்கும் சமீப காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. குறிப்பாக மலையாள தயாரிப்பாளர் சங்கம், தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார் சான்ட்ரா தாமஸ்.. அந்த வகையில் படப்பிடிப்புகளில் போதைப்பொருள் பழக்கம் சமீப நாட்களாகவே அதிகரித்து வருகிறது என்றும் இப்படி போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு வசதியாக படப்பிடிப்பு நடக்கும் இடங்களிலேயே தனி ரூம் வசதி செய்து கொடுக்கப்படுகிறது என்றும் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
இப்படி இவர்களுக்கு போதைப்பொருள் வசதி செய்து கொடுப்பதற்காகவே படத்தின் பட்ஜெட்டில் ஒரு தொகை தனியாக ஒதுக்கப்படுகிறது என்றும் இது குறித்து சம்பந்தப்பட்ட நடிகர்கள் அல்லது தொழில்நுட்ப கலைஞர்களிடம் ஏதாவது கேட்டால், அதனால் படப்பிடிப்பு நின்று விடுமோ என்கிற பயத்தில் தயாரிப்பாளர்கள் அமைதியாக இருந்து விடுகிறார்கள் என்றும் கூறியுள்ளார் சான்ட்ரா தாமஸ்.