ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
2025 தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள இரண்டு படங்களான 'டியூட்', மற்றும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே)' ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரே சமயத்தில் ஒரு கதாநாயகனின் இரண்டு படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாவது பல வருடங்களாகவே தவிர்க்கப்பட்டு வருகிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அதை முறையாக கடைபிடித்தும் வருகிறார்கள்.
ஆனால், 'டியூட்' படத்தைத் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அந்நிறுவனம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் அந்த நடைமுறையை பின்பற்றவில்லை. கடந்த சில நாட்களாக 'டியூட்' படத்தின் புரமோஷன் வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார்கள். தங்களது படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதி என்றும் படக்குழுவினர் பேசி வந்தார்கள்.
இதனிடையே, 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் படத்தை டிசம்பர் 18க்குத் தள்ளி வைப்பதாக அறிவிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், “இரண்டு ரயில்கள் ஒரே பாதையில் சென்றால் பேராபத்து. டியூட் படத்துக்கு வழிவிட நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்கள் படத்துக்கு வழிவிட்டு வேறொரு தேதியில் 'டியூட்' படத்தை ரிலீஸ் செய்யச்சொல்லி மைத்ரி மூவிஸ் நிறுவனத்திடம் பலமுறை வேண்டுகோள் வைத்தும் அது பலனளிக்கவில்லை. சினிமா நிலையை கருத்தில் கொண்டு எங்கள் அன்பின் அடையாளமாக எல்ஐகே படத்தை டிசம்பர் 18க்கு மாற்றுகிறோம்” என்று ரிலீஸ் தேதியை மாற்றி வைத்த தவகலையும் சொல்லி மைத்ரி நிறுவனம் மீது குற்றமும் சாட்டியுள்ளனர்.
இதற்கு மைத்ரி மூவிஸ் நிறுவனம் பதிலளிக்குமா அல்லது வழக்கம் போல கண்டும் காணாமல் போய்விடுவார்களா என்பது இனிமேல்தான் தெரியும். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இது குறித்து ஏதாவது நடவடிக்கை எடுக்குமா என்று சக தயாரிப்பாளர்களும் எதிர்பார்க்கிறார்கள்.