பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'காந்தாரா சாப்டர் 1'. இப்படம் 400 கோடி வசூலைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
2022ல் வெளிவந்த 'காந்தாரா' படம் 80 கோடிக்கும் சற்றே கூடுதலான வசூலைப் பெற்றிருந்தது. அதைத் தற்போது 'காந்தாரா 1' படம் முறியடித்துள்ளது. இப்படம் அடுத்த சில நாட்களில் 500 கோடி வசூலைக் கடப்பது உறுதி.
தென்னிந்திய மொழிகளில் தயாராகும் சில படங்கள் ஹிந்தியில் 100 கோடி வசூலைப் பெறுவது சாதாரண விஷயமல்ல. ஹிந்தியில் அதிக வசூலைக் குவித்த தென்னிந்தியப் படங்களில் 'புஷ்பா 2' படம் 800 கோடி வசூலைக் குவித்து முதலிடத்தில் உள்ளது.
அதற்கடுத்து 'பாகுபலி 2' 500 கோடியைக் கடந்தும், 'கேஜிஎப் 2' படம் 400 கோடியைக் கடந்தும் உள்ளன. 200 கோடி வசூலைக் கடந்த படங்களாக 'கல்கி 2898 எடி, ஆர்ஆர்ஆர்' படங்கள் இருக்கின்றன. '2.0, சலார், சாஹோ, பாகுபலி 1, புஷ்பா 1,' 100 கோடியைக் கடந்த படங்களாக உள்ளன.