ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் | படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' |
இயக்குனர் கவுதம் மேனன் தனது தந்தையின் பூர்வீகமாக கேரளாவை கொண்டிருந்தாலும், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து தமிழ் படங்களை மட்டுமே இயக்கி வந்தார். இந்த நிலையில் முதன்முதலாக மலையாளத்தில் நடிகர் மம்முட்டியை வைத்து டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்கிற படத்தை இயக்கினார். கடந்த ஜனவரி மாதம் இந்த படம் வெளியானது. ஒரு தனியார் டிடெக்டிவ் அதிகாரியான மம்முட்டி, தன்னிடம் கிடைக்கும் ஒரு லேடீஸ் பர்ஸை உரியவரிடம் ஒப்படைக்க செல்லும்போது ஏற்படும் எதிர்பாராத திடுக்கிடும் சம்பவங்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. படம் வெள்ளியாகி மிகப்பெரிய வசூலை தராவிட்டாலும் ஓரளவு வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியதாக அறிவிப்பு வெளியானது. ஆனாலும் இப்போது வரை இந்த படம் இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை. இந்த நிலையில் இன்னும் ஓடிடிக்கான விலை முடிவாகவில்லை என்றும் அதில் இழுபறி நிலவுவதால் தான் இந்த தாமதம் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இறுதித்தொகை பேசி முடிக்கப்பட்டு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.