பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு | ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் 'காட்டாளன்' பர்ஸ்ட்லுக்கு வெளியீடு | தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் |
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' என்கிற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கிட்டத்தட்ட 230 கோடிக்கு மேல் வசூலித்து மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த முதல் படம் என்கிற பெயரையும் தட்டி சென்றது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படத்தில் பிரபல காமெடி நடிகரும் இயக்குனருமான சவுபின் சாஹிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததோடு அந்த படத்தை தனது சகோதரர் மற்றும் நண்பர் ஒருவருடன் இணைந்து தயாரித்து இருந்தார்.
படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூலை ஈட்டிய சமயத்தில் கேரளாவின் மாராடு என்கிற பகுதியை சேர்ந்த சிராஜ் வலியதுரா என்பவர் இந்த படத்திற்காக தான் ஒன்பது கோடி கொடுத்ததாகவும் படம் வெளியான பிறகு லாபத்தில் தனக்கு 40 சதவீதம் பங்கு தருவதாக சொன்ன தயாரிப்பாளர்கள் தற்போது அதை மறுத்து பின்வாங்குவதாகவும் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து சவுபின் சாஹிர் அவரது சகோதரர் பாபு சாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இதனை அடுத்து தயாரிப்பாளர் தரப்பிலிருந்து, சிராஜ் வலியதுரா தங்களுக்கு படப்பிடிப்பை நடத்தி தருவதாக ஒப்புக்கொண்ட பணத்தை உரிய நேரத்தில் தராததால் தங்களுக்கு படப்பிடிப்பில் பல இடைஞ்சல்கள் ஏற்பட்டு, அதனால் படப்பிடிப்பு தாமதமாகி மிகுந்த சிரமங்களுக்கு இடையே தான் இந்த படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். அதனால் அவரது வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை நிராகரித்து அவர்களது மனுவை தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் விசாரணை சூடு பிடிக்கும் என்று தெரிகிறது.