பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

ஜெயிலர் 2 படப்பிடிப்பு கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நடந்து வந்தது. ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கே படமாக்கப்பட்டதா என்று விசாரித்தால், ஜெயிலர் 2வில் மோகன்லால் நடிப்பது உறுதி. ஆனால், இப்போதைய ஷெட்யூலில் மோகன்லால் சீன்கள் எடுக்கப்படவில்லை. அவர் தனது மலையாள படங்களில் பிஸியாக இருக்கிறார். அடுத்த ஷெட்யூலில் அவர் காட்சிகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்க வேல்ஸ் நிறுவனம், லைகா, சில தெலுங்கு பட நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. ஆனாலும், இன்னமும் உறுதியாக முடிவை ரஜினி எடுக்கவில்லை. கூலி, ஜெயிலர் 2 படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இரண்டு படங்களும் ஆயிரம் கோடி வசூலை தாண்ட வாய்ப்பு என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், அதற்கேற்ப கதைகள், பட நிறுவனம், இயக்குனரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் ரஜினிகாந்த் உறுதியாக இருக்கிறாராம்.