நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய் நடிக்கும் கடைசி படம் என்று சொல்லப்படும் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. அதேசமயம், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் இன்னொரு பக்கம் நடந்து வருகிறது. இந்நிலையில், விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஜூன் மாதத்துக்குள் முடிக்க வேண்டும். அவர் மிகப்பெரிய அரசியல் திட்டத்தை ஜூன் மாதத்துக்குபின் செயல்படுத்த திட்டமிடுகிறார். முதலில் ஒரு பெரிய கூட்டம் அல்லது மாநாடு நடத்திவிட்டு அப்புறம், தமிழகம் முழுக்க பிரசாரம் செய்யப்போகிறார். தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்யும்போது சினிமா பணிகளில் கவனம் செலுத்த முடியாது. ஆகவே, ஜூனில் அவர் சம்பந்தப்பட்ட சீன், பாடல்காட்சி, டப்பிங்கை முடித்துவிட வேண்டும் என்று விஜய் தரப்பு மூலம் படக்குழுவுக்கு சொல்லப்பட்டு இருக்கிறதாம். அதனால், ஜனநாயகன் பணிகள் இன்னும் வேகம் எடுக்கின்றன.