சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி |

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக்லைப்' படம் வருகிற ஜூன் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் அளித்த ஒரு பேட்டியில், நடிப்பில் இருந்து எப்போது ஓய்வெடுப்பீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ''சினிமாவை எல்லோரும் பொழுதுபோக்காகதான் பார்க்கிறார்கள். ஆனால் அது ஒரு சக்தி வாய்ந்த ஊடகம்.
நாங்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலம் சமூகத்தில் உள்ள குறைகளை சரி செய்ய முடியும். பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். அதை கருத்தில் கொண்டுதான் கதைகளை நான் தேர்வு செய்து நடிக்கிறேன். இதை ஒரு பொறுப்பாகவே நான் பார்க்கிறேன். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற அந்த தீ எனக்குள் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது. அது அணையும் வரை நான் சினிமாவில் நடித்துக் கொண்டேதான் இருப்பேன்'' என்று பதில் கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன்.