டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
மலையாள திரை உலகில் தனது 45 வருட திரையுலக பயணத்தில் தற்போதும் நம்பர் ஒன் இடத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். சமீபத்தில் அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான 'எம்புரான்' மற்றும் 'தொடரும்' ஆகிய படங்கள் 200 கோடிக்கு மேல் வசூலித்து தற்போதும் அவர் பாக்ஸ் ஆபீஸ் கிங் என நிரூபித்துள்ளன. இந்த நிலையில் இன்று (மே 21) தனது 65வது பிறந்தநாளில் அடி எடுத்து வைக்கிறார் மோகன்லால். இதை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதில் மோகன்லால் ரசிகரும் கேரளாவை சேர்ந்த பிரபல ஓவியருமான டாவின்சி சுரேஷ் என்பவர் மோகன்லாலின் பிறந்தநாள் பரிசாக அவரது உருவத்தை பலாப்பழத்தைக் கொண்டு ஓவியமாக வரைந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். மோகன்லால் 65 வயதை தொடுகிறார் என்பதால் 20 வகையான பலாப்பழங்களில் இருந்து பழம், காய், விதை, தோல், இலைகள் என அதன் 65 வகையான பாகங்களை வைத்து இந்த ஓவியத்தை உருவாக்கியுள்ளார் டாவின்சி சுரேஷ்.
எட்டடி உயர அகலத்தில் இந்த ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு ஆகிய வண்ணங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. அபூர்வமாக விளையும் சிவப்பு நிற பலாப்பழத்தை பார்த்ததும் தான் இப்படி ஒரு ஓவியத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு தோன்றியதாக ஓவியர் டாவின்சி சுரேஷ் கூறியுள்ளார். திருச்சூர் பகுதியில் உள்ள வர்கீஸ் தரகன் என்பவருக்கு சொந்தமான பலா தோட்டத்தில் வைத்து இந்த ஓவியத்தை வரைந்துள்ளார் டாவின்சி சுரேஷ்.