நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

'விடுதலை' இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் 'வாடிவாசல்' படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படத்திற்கான முதல்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. படம் பற்றிய அறிவிப்பு 2021ல் வெளியான நிலையில், இதுவரை படப்பிடிப்பு துவங்காத நிலையில், இந்த முறை வாடிவாசல் படத்தை எடுத்த பிறகே அடுத்த படத்தை துவங்குவதில் உறுதியாக உள்ளார் வெற்றிமாறன்.
இந்த நிலையில் வெற்றிமாறன் அளித்த பேட்டி ஒன்றில், வாடிவாசல் படத்திற்கு அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். ஏற்கனவே தனுஷ் நடிப்பில் இயக்குனர்கள் விக்னேஷ் ராஜா, மாரி செல்வராஜ் இயக்க உள்ள படங்களை தயாரிப்பதாக வேல்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. அதை முடித்ததும் வெற்றிமாறன் படத்தை துவங்குகின்றனர்.
வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி என்றாலே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பது வழக்கம்தான். 'பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன்' ஆகிய படங்களில் இவர்கள் இணைந்து பணிபுரிந்துள்ளனர். இதில் ‛வடசென்னை 2' படம் எப்போது துவங்கும் என பல ஆண்டுகளாக ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் இவர்கள் கூட்டணி மீண்டும் இணைவது ‛வடசென்னை 2' படத்திற்கா அல்லது வேறு புதிய கதைக்கா என்பது இனிமேல் தான் தெரியவரும்.