புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
மலையாள திரையுலகில் பழம்பெரும் நடிகையான நெய்யாற்றின்கரை கோமளம் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவருக்கு வயது 96. கடந்த 1951ல் டார்ஜான் படத்தை தழுவி மலையாளத்தில் காட்டை மையப்படுத்தி வெளியான முதல் படமான வனமாலா என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் கோமளம். அதன் பிறகு 1952 ல் நடிகர் பிரேம் நசீர் கதாநாயகனாக அறிமுகமான மருமகள் படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்தார் கோமளம்.
1955ல் வெளியான நியூஸ் பேப்பர் பாய் என்கிற படத்தில் அவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது. ஆனாலும் 1955 வரை நான்கு வருடங்கள் மட்டுமே தனது நடிப்பை தொடர்ந்த கோமளம் குடும்பப் பிரச்சினை மற்றும் அப்போது சமூகத்தில் எழுந்த சில எதிர்ப்புகள் காரணமாக நடிப்பை விட்டு ஒதுங்கி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.