ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் தனது காதலியான நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச செய்தி அனுப்பி டார்ச்சர் செய்தார் என்று அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைதானார். கடந்த 100 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் தர்ஷினின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி ஆகி வருகின்றன. தற்போது மீண்டும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மது தாக்கல் செய்துள்ளார் தர்ஷன்.
இந்த நிலையில் கன்னட தயாரிப்பாளரான பரத் என்பவர் தர்ஷன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி கெங்கேரி காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக தர்ஷனின் மேனேஜர் நாகராஜ் மீதும் புகார் அளித்துள்ளார் தயாரிப்பாளர் பரத். இதனை தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னட சினிமாவின் அடையாளமாக திகழ்ந்த மறைந்த நடிகரான ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவின் சகோதரரின் மகன் சுராஜ் கதாநாயகனாக அறிமுகப்படும் விதமாக புதிய படம் ஒன்றை கடந்த 2020ல் துவங்கினார் தயாரிப்பாளர் பரத். ராஜ்குமார் குடும்பத்தின் மீதான பாசத்தில் துவக்க விழா நிகழ்வில் கலந்து கொண்டு சுராஜுக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்தார் தர்ஷன். இடையில் கொரோனா தாக்கம் காரணமாக படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியாமலும் தேவையான பணம் புரட்ட முடியாமலும் சிரமப்பட்டார் தயாரிப்பாளர் பரத். அப்போதே இடையிடையே பரத்திற்கு போன் செய்து இந்த படம் பற்றி விசாரித்தார் தர்ஷன்.
ஒருமுறை கொஞ்சம் டென்சனாகி சுராஜின் எதிர்காலம் பற்றி உனக்கு கவலை இல்லையா? எப்படியாவது பணத்தை புரட்டி படத்தை முடிக்கும் வேலையை பார். இல்லையென்றால் உன்னை இருக்கும் இடம் தெரியாமல் செய்து விடுவேன். இதை என் எச்சரிக்கையாக கூட நீ எடுத்துக் கொள் என்று மிரட்டல் விடுத்தார். இந்த பேச்சு குறித்த ஆடியோ ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஒரு நாள் தயாரிப்பாளர் பரத்தை தான் நடித்து வந்த படப்பிடிப்பு தளத்திற்கே இதுகுறித்து பேச வருமாறு அழைத்த தர்ஷன், நாள் முழுவதும் அவரை அங்கிருந்து நகர விடாமல் உட்கார வைத்திருக்கிறார். இது குறித்து அப்போதே மீடியாக்களில் தர்ஷன் மீது குற்றச்சாட்டாக வைத்த தயாரிப்பாளர் பரத், இப்போது அதை காவல் நிலையத்தில் நேரடி புகாராகவே கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.