கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா | திரிஷா போன்ற அமெரிக்கா பெண் ஒருவர் என் மீது காதல் வயப்பட்டார் : நடிகர் பாலா புது தகவல் | எம்புரான் படத்திற்கு எந்த அரசியல் அழுத்தமும் தரப்படவில்லை : சுரேஷ் கோபி |
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் திலீப். இவருக்கும் நடிகை மஞ்சுவாரியருக்கும் பல வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்று மீனாட்சி என்கிற ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திலீப், மஞ்சு வாரியர் தம்பதி கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன்பிறகு திலீப், தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகை காவ்யா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகாலட்சுமி என்கிற மகளும் பிறந்தார்.
அதேசமயம் மஞ்சு வாரியர் விவாகரத்து பெற்று பிரிந்தாலும் அவரது மகளான மீனாட்சி தாயுடன் செல்லாமல் அப்போது இருந்து இப்போது வரை தன்னுடைய தந்தை திலீப்புடனேயே வசித்து வருகிறார். அது மட்டுமல்ல தனது சிற்றன்னை காவ்யா மாதவனுடன் தாயை விட மிக அதிக அன்பும் நெருக்கமும் காட்டி பழகி வருகிறார். பெற்றோரைப்போல மீனாட்சியும் சினிமாவுக்கு நடிக்க வருவாரா என்பது போன்று கடந்த சில வருடங்களாகவே கேட்கப்பட்டு வந்த நிலையில் அவர் சத்தம் இல்லாமல் டாக்டர் படிப்பை முடித்துள்ளார். படிப்பு முடித்து பட்டம் பெற்ற மீனாட்சி தனது தந்தை திலீப் மற்றும் சிற்றன்னை காவியா மாதவனுடன் இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தனது மகள் டாக்டர் ஆனது குறித்து திலீப் கூறும்போது, “நீண்ட நாள் கனவு நனவான தருணம் இது. கடவுளுக்கு நன்றி. மகளுக்கு அன்பும் மரியாதையும்” என்று கூறியுள்ளார். திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் இது குறித்து கூறும்போது, “உன்னுடைய அர்ப்பணிப்புக்கும் கடின உழைப்புக்கும் உனக்கு இது கிடைத்திருக்கிறது. உன்னை நினைத்து நாங்கள் இன்று பெருமைப்படுவதுடன் இன்னும் இதைவிட அதிக உயரங்களுக்கு செல்லும் தகுதி உனக்கு இருக்கிறது என்பதும் எங்களுக்கு தெரியும்” என்று எனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.