ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
சென்னை அருகே அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை, நோயாளிகள் தவிக்கின்றனர் என்று நடிகர் கருப்பு புகார் கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை போரூரில் நகர்ப்புற சமுதாய அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு கால் வலி காரணமாக காமெடி நடிகர் கருப்பு சிகிச்சை பெற சென்றுள்ளார். அவர் சென்றிருந்த நேரம் மருத்துவமனையின் உள்ளே டாக்டர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.
அதேநேரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மூதாட்டி ஒருவர் அங்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். டாக்டர்கள் இல்லாத காரணத்தால் அங்கு இருந்த மற்ற நோயாளிகள், மூதாட்டியை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்தவர்கள், கருப்புடன் இணைந்து அவர்கள் மருத்துவமனையில் உள்ள ஊழியர்களுடன் திடீரென வாக்குவாதத்தில் இறங்கினர்.
இதுகுறித்து கஞ்சா கருப்பு கூறியதாவது : லட்சக்கணக்கான ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டு வேறு எங்கோ தனியாக கிளினீக் நடத்தி வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனையை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இதுபற்றி மருத்துவத்துறை அமைச்சர் பேச வேண்டுமா? இல்லையா? வெறிநாய் கடித்து ஒருவர் வந்திருக்கிறார். மண்டை உடைந்து மாணவர் ஒருவர் வந்துள்ளார். மருத்துவர்கள் யாரும் இல்லை.
இவ்வாறு அவர் கொதிப்புடன் கூறி இருக்கிறார்.
விளக்கம்
இதனிடையே 3 டாக்டர்கள் இருக்க வேண்டிய நேரத்தில் இரண்டு டாக்டர்கள் ஏற்கனவே பணியில் இருந்தனர். ஒரு டாக்டர் மட்டும் காலதாமதமாக வந்ததால் சிறிது நேரம் சிகிச்சை பாதிப்பு ஏற்பட்டது. 3வது டாக்டரும் வந்த பின் மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.