பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? |

கடந்த 2022ம் ஆண்டில் வெளியான சுழல் என்ற தமிழ் வெப் தொடரை பிரம்மா, அனுச்சரண் முருகையா ஆகியோர் இயக்கி இருந்தனர். விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி கதை, திரைக்கதை எழுதினர். கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்தனர். கிரைம் கலந்த திரில்லர் தொடராக வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது சுழல் தொடரின் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. இதிலும் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி சேர்ந்து நடிக்க, அவர்களுடன் மஞ்சிமா மோகன், கயல் சந்திரன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்.
இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெளியாகும் இந்த சுழல்-2 தொடரை பிரம்மா மற்றும் சர்ஜுன் கே.எம் ஆகியோர் இயக்குகிறார்கள். இவர்கள் ஏற்கனவே தியோர் டெக்ஸ் சீசன்- 2 தொடரை இயக்கியவர்கள். இந்த சூழல் 2 தொடரின் டிரைலர் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது இந்த வெப் தொடர் வருகின்ற பிப்ரவரி 28ம் தேதி அன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.