ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
கடந்த 2017ல் பிரபல மலையாள நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து திரும்பும்போது காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதுடன் அந்த நிகழ்வும் வீடியோவாக எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட நடிகை துணிச்சலுடன் இது குறித்து புகார் அளித்ததின் பேரில் இந்த விஷயம் அப்போது வெளிச்சத்திற்கு வந்தது. இதில் முதன்மை குற்றவாளியாக சினிமா துறையில் பணியாற்றும் பல்சர் சுனில் என்பவன் கைது செய்யப்பட்டான். கிட்டத்தட்ட பத்து பேருக்கு மேல் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் எட்டாவது குற்றவாளியாக நடிகர் திலீப்பும் சேர்க்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் சிறை தண்டனையும் அனுபவித்தார். தற்போது ஜாமீனில் வெளிவந்து தான் படங்களில் நடித்து வருகிறார்.
கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு மேல் இந்த வழக்கு விசாரணை நீடித்து வந்த நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இது தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக பல்சர் சுனில் சமீபத்தில் அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கே கூடியிருந்த மீடியாக்களிடம் பேசும்போது ஓப்பனாகவே சில விஷயங்களை வெளியிட்டான்.
இது குறித்து அவன் கூறும்போது, “நடிகையை கடத்தி துன்புறுத்துவதுடன் அதை வீடியோவாக எடுக்கும்படியும் கூறி எனக்கு ஒன்றரை கோடி ரூபாய் தருவதாக நடிகர் திலீப் தான் கூறினார். 80 லட்சம் கொடுத்த நிலையில் இன்னும் 70 லட்சம் அவர் தரவே இல்லை. காரில் சம்பந்தப்பட்ட நடிகையை கடத்தும்போது கூட அவரிடம் எதற்காக அவரை கடத்துகிறோம் என்பதை நான் கூறினேன். அப்போது அவர் என்னை விட்டு விடுங்கள், உங்களுக்கு தேவையான பணத்தை நான் தருகிறேன் என்று கூறினார். அப்போது நான் சரியான முடிவை எடுத்திருந்தால் இப்படி ஜெயில் தண்டனையை அனுபவிக்கும் நிலைமை எனக்கு வந்திருக்காது” என்று கூறியுள்ளார்.
பல்சர் சுனில் நடிகர் திலீப் குறித்து வெளிப்படையாகவே கூறியுள்ளது, இந்த வழக்கு குறித்து தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னொரு பக்கம் திலீப் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார். இதன் இறுதி கட்ட விசாரணை வரும் ஏப்ரல் 7ம் தேதி நடைபெற இருக்கிறது. அதன் பின்னர்தான் என்ன நடக்க இருக்கிறது என்பது தெரிய வரும்.