சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‛குட் பேட் அக்லி'. திரிஷா, பிரசன்னா, சுனில், பிரபு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் 10ல் படம் திரைக்கு வருகிறது. ஏற்கனவே டீசர், இரு பாடல்கள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றன. இப்போது படத்தின் டிரைலர் இன்று(ஏப்., 4) இரவு 9:01க்கு வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டு சிறு தாமத்திற்கு பின் வெளியானது.
படத்தின் டிரைலரை பார்க்கும்போதே இது ஒரு கேங்ஸ்டர் கதை என நன்றாகவே தெரிகிறது. ஒருகாலத்தில் கேங்ஸ்டராக இருந்த அஜித், மகனுக்காக வயலன்ஸை விடுகிறார். அதே மகனுக்காக ஒரு பிரச்னை வரும்போது மீண்டும் கேங்ஸ்டர் ஆக மாறுகிறார் அஜித். இதுதான் படத்தின் ஒருவரிக்கதை.
அஜித்தின் மனைவியாக திரிஷாவும், அவரது சக நண்பர்களாக பிரசன்னா, சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வில்லனாக அர்ஜுன் தாஸ் வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பின் அஜித் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் சிம்ரன். அஜித்தின் முந்தைய படங்களில் அவர் டான்-ஆக தோன்றிய பட கேரக்டர்களின் சாயல்களை எல்லாம் இந்த படத்தில் சேர்த்துள்ளார் ஆதிக். உதாரணத்திற்கு அமர்க்களம், தீனா, வில்லன், வரலாறு, பில்லா, மங்காத்தா போன்ற படங்களின் சாயல்கள் சில காட்சிகளில் வந்து செல்கின்றன.
நீண்ட இடைவெளிக்கு பின் அஜித்தின் குறும்புத்தனம் கலந்த டான் கேரக்டரில் நடித்துள்ளார் என டிரைலரை பார்க்கையில் புரிகிறது. நிச்சயம் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் விதமான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளனர். விடாமுயற்சியில் ஏற்பட்ட தோல்வியை குட் பேட் அக்லி-யில் அஜித் சரி செய்வார் என எதிர்பார்க்கலாம்.




