'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கடந்த சில மாதங்களாகவே நடிகர் பாலா தனது திருமணம் தொடர்பான சர்ச்சைகளில் பரபரப்பான செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். தமிழில் அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட சில படங்களின் நடித்த இவர் இயக்குனர் சிவாவின் தம்பியும் கூட. மலையாள திரையுலகில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து பிரிந்து தற்போது நான்காவதுதாக தனது உறவுக்கார பெண்ணான கோகிலா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் பாலா.
சமீப நாட்களாக இவரது மூன்றாவது மனைவி டாக்டர் எலிசபெத்துக்கும் இவருக்கும் சோசியல் மீடியாவில் வார்த்தை போர் நடந்து வந்து இப்போதுதான் ஓய்ந்திருக்கிறது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை காதலிக்க விரும்பியதாக இன்னொரு புதிய தகவலையும் கூறியுள்ளார் நடிகர் பாலா.
இதுகுறித்து பாலா கூறும்போது, “அமெரிக்காவிலிருந்து இங்கே தமிழ்நாட்டுக்கு சுற்றுப்பயணம் வந்திருந்த பெண் ஒருவர் எனக்கு அறிமுகமானார். பார்ப்பதற்கு நடிகை திரிஷா போலவே இருப்பார். என்னிடம் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் காட்டிய அவர் என்னை பாலா சேட்டா என்று கூப்பிடும் அளவிற்கு வந்துவிட்டார். ஒருமுறை என் வீட்டுக்கு வந்தபோது அவர் என்னிடம் தனது காதலையும் சொன்னார். அப்போது தான் பக்கத்து அறையில் இருந்து கோகிலா வெளியே வந்தார்.
கோகிலாவை அந்த பெண்ணிடம் காட்டி இவருடன் சில மாதங்களாக நான் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன். இவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறியதும் அந்த பெண் கொஞ்சம் அப்செட் ஆனார். மீண்டும் என்னிடம் ஏதாவது நம் காதலுக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டுப் பார்த்தார். ஆனால் நான் கோகிலாவை சுட்டிக்காட்டி இந்த பெண் என்னை அவரது மூன்று வயதில் இருந்து விரும்பி கொண்டிருக்கிறாள். இனி அவள்தான் என் உலகம் என்று கூறியதும் எங்களை வாழ்த்தி விட்டு தன் மனதை தேற்றிக்கொண்டு கிளம்பி சென்றார்” என்று கூறியுள்ளார் பாலா.