சினேகா கேட்ட கேள்வி : பதில் சொல்ல மறுத்த சேரன் | எளிமையாக நடந்த கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் | சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் |

ஜி.எஸ்.ஆர்ட்ஸ் சார்பில் ஜி.அருள்கு மார் தயாரித்துள்ள படம் தீயவர் குலைநடுங்க. அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ், 'பிக் பாஸ்' அபிராமி, ராம்குமார், ஜி.கே.ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்ய, பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் தினேஷ் லெட்சுமணன் இயக்கி உள்ள இந்த படம் கிரைம் திரில்லர் ஜார்னரில் தயாராகி உள்ளது. தற்போது படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு பணிகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் வெளியீடு குறித்த அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.