'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ரஜினி நடித்த 'அன்புள்ள ரஜினிகாந்த்' படம் பற்றி அனைவரும் அறிவர். ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படத்தின் தலைப்பு 'அன்புள்ள எம்ஜிஆர்'.
அந்த காலத்திய சினிமா கதாசிரியரும், தயாரிப்பாளர் அழகன் தமிழ் மணியும் நண்பர்கள். இருவரும் சேர்ந்து டில்லியில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் 'டச் ஆப் லவ்' என்ற படத்தை பார்த்தார்கள். எல்விஸ் பிரஸ்லி என்ற பிரபல பாப் பாடகரின் தீவிர ரசிகையாக ஒரு உடல் ஊனமுற்ற சிறுமி இருப்பார். இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்து கொள்ள மாட்டார்கள். ஆனால் கடிதத்திலும், டெலிபோனிலும் பேசிக் கொள்வார்கள். இந்த சிறுமி இறப்பதற்கு முன்பாக எல்லிஸ் பிரஸ்லியை சந்திக்க விரும்புவாள். இருவரும் சந்திப்பார்கள். இப்படி நெகிழ்ச்சியான படம் இது.
இந்த படத்தை பார்த்த பிறகு இதே கதையை தமிழில் படமாக்க விரும்பிய இருவரும் அதற்கு எம்ஜிஆர் தான் சரியானவர் என்று முடிவு செய்து அவரை சந்தித்து கதை சொன்னார்கள். கதையை கேட்ட எம்ஜிஆர் பல காட்சிகளில் கண் கலங்கினார். அப்போது முதல்வராக இருந்தபோதும் சில காட்சிகளில்தானே நடிக்க வேண்டும் என்று நடிக்க ஒப்புக் கொண்டதோடு இது தொடர்பாக அமைச்சர் அரங்கநாயகத்திடம் பேசுங்கள் என்று கூறிவிட்டார்.
கதையை கேட்ட அரங்கநாயகம் படத்தை நானே தயாரிப்பதாக இருந்தால் எம்ஜிஆரை நடிக்க வைக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த நண்பர்கள் இருவரும் இதே கதையை ரஜினியிடம் சொன்னார்கள். ரஜினி உடனே ஒப்புக்கொண்டார். படத்தின் தலைப்பும் 'அன்புள்ள ரஜினிகாந்த்' என்று மாற்றப்பட்டது. இந்த படத்தில் சம்பளம் எதுவும் பெறாமல் 10 நாட்கள் நடித்துக் கொடுத்தார் ரஜினி. படமும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் மீனா, ரஜினியை நேசிக்கும் சிறுமியாக நடித்திருந்தார். ரஜினி நண்பர் நட்ராஜ் இயக்கியிருந்தார்.