நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மும்பை : வயது மூப்பு காரணமாக பழம்பெரும் ஹிந்தி நடிகரும், இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் இன்று(ஏப்., 4) காலமானார்.
ஹிந்தி சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் மனோஜ் குமார், 87. இவர் கடந்த 1937ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி பிறந்தார். இவர் பெரும்பாலும் நாட்டுப்பற்று மிக்க படங்களில் நடித்தும், இயக்கியும் பிரபலமானவர். இவரை பரத் குமார் என்றும் அழைத்து வருகின்றனர். புராப் அவுர் பஸ்ஜிம், கிரான்டி, ரொட்டி, காபாடா அவுர் மாகான், யாத்கார், பெஹ்சான், மேரா நாம் ஜோக்கர் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
1992ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2015ல் சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் மத்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது.
பா.ஜ.,வில் இணைந்து அரசியலில் ஈடுபாடு காட்டி வந்த மனோஜ் குமார், வயது மூப்பு காரணமாக, பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை சந்தித்து வந்தார். இந்த நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.