ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
மறைந்த பிரபல மலையாள குணச்சித்திர நடிகர் திலகனை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். விஜயகாந்த் நடித்த சத்ரியன் படம் மூலம் தமிழுக்கு வந்த அவர் முதல் படத்திலேயே தனது நடிப்பாலும் வசன உச்சரிப்பாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து தமிழில் வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தார். அவரது மகன் ஷம்மி திலகனும் மலையாள திரையுலகில் வில்லன் நடிகராக அறிமுகமாகி சமீபகாலமாக குணச்சித்திர நடிப்பிலும் புதிய பரிமாணம் காட்டி ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் ஷம்மி திலகனின் மகன் அபிமன்யுவும் தனது தாத்தா மற்றும் தந்தையின் வழியை பின்பற்றி நடிகராக திரையுலகில் நுழைந்துள்ளார். நடிகர் உன்னி முகுந்தன் மலையாளத்தில் கதாநாயகனாக நடித்த வரும் மார்க்கோ என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அபிமன்யு. இந்த வாய்ப்பு தனக்கு நடிகர் உன்னி முகுந்தன் மூலமாகவே தேடி வந்தது என்று கூறும் அபிமன்யு, தனது தாத்தாவின் பெயரை தந்தை காப்பாற்றி விட்டார். இவர்கள் இருவரின் பெயருக்கு எந்த பாதிப்பும் வந்து விடாத அளவிற்கு அவர்களது பெயரை நானும் காப்பாற்றுவேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.