ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் ஹாட் மற்றும் பலரால் விருப்பப்படுகிற ஹீரோயின் கயாடு லோஹர். அவர் சின்ன வீடியோ போட்டாலே, சின்னதாக ஸ்டெப் போட்டாலே அந்த வீடியோ பல லட்சம் வியூஸ் போகிறது. தமிழில் டிராகன் என்ற ஒரே படத்தில் நடித்த கயாடு லோஹர் தமிழில் கனவுக்கன்னியாக இருக்கிறார். அவரை பல கல்லுாரி, கடை திறப்பு விழாக்களுக்கு பலர் ஆர்வமாக அழைக்கிறார்கள். அடுத்து அதர்வா முரளி ஜோடியாக இதயம் முரளி, சிம்புவின் அடுத்த படத்தில் கயாடு ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்நிலையில், சில நாட்களாக கயாடு குறித்து கடும் விமர்சனங்கள் வர துவங்கி உள்ளன. டாஸ்மாக் ஊழலை மையமாக வைத்து தமிழகத்தில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடுகளிலும் ரெய்டு நடந்தது. இதுதொடர்பாக வெளியாகும் விஷயங்களில் கயாடு பெயரும் அடிபடுகிறது. அவர் அடிக்கடி பார்ட்டிக்கு போனார், அந்த டீமுடன் நட்புடன் இருக்கிறார். அவருக்கு பல லட்சம் பரிசு கிடைத்தது என்று செய்தி வெளியாகி வருகிறது. ஒரு படம் தான் வந்தது. உயரத்துக்கு போனேன். அதற்குள் இவ்வளவு கெட்டப்பெயரா? இது சினிமா வாழ்க்கையை பாதிக்குமா என கயாடு கவலையில் இருக்கிறாராம்.
பொதுவாக நடிகைகள் சிலர் பார்ட்டிக்கு செல்வது உண்டு. சீக்கிரம் சம்பாதிக்க வேண்டும், கார், பங்களா என செட்டிலாக வேண்டும் என்று நினைக்கும் சில நடிகைகள் அதனால் தேவையில்லாத சர்ச்சைகளிலும் சிக்குகின்றனர். கயாடு போன்று சமூகவலைதள பதிவுகளில் வரும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் இன்னும் சில நடிகர், நடிகைகள் தவித்துக் கொண்டு உள்ளனர்.