47 வருடங்களுக்குப் பிறகு கூட்டணி : எதையும் 'ஷேர்' செய்யாத ரஜினிகாந்த் | தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! |

நடிகர் பிரித்விராஜ் பிஸியான நடிகராக மலையாளம் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த லூசிபர் திரைப்படம் மூலமாக வெற்றிகரமான இயக்குனராகவும் மாறிய அவர், அதன்பிறகு மீண்டும் மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்கிற படத்தை இயக்கினார். தற்போது மூன்றாவது முறையாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் என்கிற படத்தை இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தெலுங்கு இளம் நடிகர் கார்த்திகேயா தேவ் என்பவர் தற்போது குஜராத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இவர் வேறு யாருமல்ல.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படத்தில் பிரித்விராஜ் நடித்திருந்த வரதராஜ மன்னர் என்கிற கதாபாத்திரத்தில் சிறு வயது தோற்றத்தில் நடித்தவர் தான். அந்த படத்தில் இவரது நடிப்பு பிடித்து போய்விட தான் இயக்கும் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை கொடுத்து மலையாள திரையுலகிற்கு அவரை அழைத்து வந்து விட்டார் பிரித்விராஜ்.