ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
நடிகர் வினய் ராய் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தவர், ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறையவே திடீரென வில்லனாக புதிய அவதாரம் எடுத்தார். டாக்டர், துப்பறிவாளன், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்தவருக்கு அதைத்தொடர்ந்து தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் வாய்ப்பு தேடி வந்தது. அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாரன்சிக் என்கிற சைக்கோ கிரைம் திரில்லர் வெற்றி படத்தை கொடுத்த அகில்பால் - அனாஸ்கான் இருவரும் அடுத்ததாக தற்போது இயக்கி வரும் ஐடென்டிடி படத்தில் வில்லனாக நடித்துள்ளார் வினய் ராய். பாரன்சிக் பட கதாநாயகனான டொவினோ தாமஸ் தான் இந்த படத்திலும் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார்.
இந்த படத்தில் தன்னுடைய காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் வினய் ராய். அவரது நடிப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு குறித்து பாராட்டியுள்ள இயக்குனர் அகில்பால் கூறும்போது, “கடந்த 2022 செப்டம்பர் 23ம் தேதி இந்த கதையை நீங்கள் கேட்ட நாளிலிருந்து இப்போது வரை உங்களது எனர்ஜி இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்துள்ளது. நீங்கள் பங்குகொண்டு நடித்த இந்த 52 நாட்களும் மறக்க முடியாதவை. உங்களுடன் பணியாற்றியது பொழுதுபோக்காக இருந்ததுடன், நீங்கள் ஆலன் ஜேக்கப் என்கிற உங்கள் கதாபாத்திரத்திற்காக கொடுத்த உழைப்பையும் மறக்க முடியாது. நீங்கள் இந்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் கடைசியாக பேசிய வசனமான 'இது முடிவு இல்லை' என்று சொல்வது போல, இனிவரும் அடுத்தடுத்த படங்களிலும் நாம் இணைந்து பணியாற்றுவோம்” என்று கூறியுள்ளார். தற்போதைக்கு இந்த படத்தின் 123வது நாள் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.