'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
லியோ படத்திற்கு பிறகு தமிழில் விடாமுயற்சி, தக்லைப் போன்ற படங்களில் நடித்து வரும் திரிஷா, மலையாளத்தில் ஐடென்டிட்டி என்ற படத்திலும், தெலுங்கில் விஸ்வாம்பரா படத்திலும் நடித்து வருகிறார். அதோடு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்திலும் அவர் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் மலையாளத்தில் டோவினோ தாமசுக்கு ஜோடியாக திரிஷா நடித்த வந்த ஐடென்டிட்டி படத்தில் அவருக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துவிட்டது. அதையடுத்து தான் அந்த யூனிட்டில் இருந்து வெளியேறும் கடைசி நாளில் டொவினோ தாமஸ் மற்றும் அனைத்து டெக்னீசியன்களுடனும் திரிஷா எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அகில் பால் என்பவர் இயக்கி வரும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வர உள்ளது.