ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? | 'ரெட்ரோ' 235 கோடி வசூல்: ஷாக் ஆன ரசிகர்கள் - உண்மை என்ன? | ஆறு மாத இடைவெளியில் அழகாக யோசிக்கும் ஆதிக் | விஜய்சேதுபதி சொன்ன சைக்கிள் கதை | கங்கை அமரன் அப்படி பேசலாமா? : ஜி.வி.பிரகாஷ் ஆதரவாக குரல்கள் | கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! |
வெளிநாட்டில் செட்டிலான பாடகியும், ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா தற்போது இந்தியா திரும்பி முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் குறித்து பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதன் ஒரு பகுதியாக தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்றும் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கு விளக்கம் அளித்து கார்த்திக் குமார் ஒரு ஆடியோ வெளியிட்டார் அதி "நீ அசிங்கமாக பேசுகிறாய், இதெல்லாம் படிச்சவங்க பேசுற பேச்சு இல்ல. படிக்காத பட்டியலின பெண்கள் பேசுகிற மாதிரி நீ பேசுகிறாய். நீ ஏன் இந்த மாதிரி பேசுகிறாய். உன் வளர்ப்பு அப்படியில்லயே... உன் வளர்ப்பு நல்ல வளர்ப்புதானா, நல்ல ஆச்சாரமான பேமிலில இருந்துதான வந்த..." என்று பேசியிருந்தார். தற்போது இந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கார்திக்குமாரின் பேச்சு பட்டியலின பெண்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என்று அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை சைபர் கிரைம் போலீசுக்கு அனுப்பிய ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அந்த ஆடியோவில் இருப்பது எனது குரல் அல்ல. நான் ஒரு போதும் அப்படி பேசுபவன் அல்ல என்று கார்த்திக் குமார் கூறியுள்ளார். மேலும் இந்த பிரச்னை தொடர்பாக சென்னை மயிலாப்பூர் துணை ஆணையரிடம் அந்த ஆடியோவில் இருப்பது எனது குரல் அல்ல என புகார் மனு அளித்துள்ளார் கார்த்திக்.