ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
தற்போது நயன்தாரா, தனுஷ் மோதல்தான் தமிழ் சினிமாவில் ஹாட் டாபிக். நயன்தாராவின் ஆவணப்படம் ஒன்று நெட்பிளிக்சில் ஒளிபரப்பாகி உள்ளது. இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்ற 'நானும் ரெளடிதான்' படத்தின் சில வினாடி மேக்கிங் வீடியோ இடம் பெற்றிருப்பதால் தயாரிப்பாளர் தனுஷ் 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பினார், அதை தொடர்ந்து அவரை கடுமையாக விமர்சித்து நயன்தாரா அறிக்கை வெளியிட்டார்.
இதற்கிடையில் இனி யார் பற்றியும் பேச மாட்டேன் என்று கூறி மும்பைக்கு சென்ற பாடகி சுசித்ரா இப்போது மீண்டும் தனுஷ் பற்றி ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது: தனுஷ் நயன்தாராவிற்கு இந்த தொல்லை மட்டும் கொடுக்கவில்லை. 'யாரடி நீ மோகினி' படப்பிடிப்பின்போதும் தொல்லை கொடுத்துள்ளார். நயன்தாரா பதிவை லைக் செய்த நஸ்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அனுபமா போன்ற நடிகைகள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றால் தனுஷிற்கு சலாம் போட வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு சலுகையாக கட் ஆகும். மோசமான கேரவன்கள் வழங்கப்படும்.
அம்மா பாத்திரத்தில் நடித்த நடிகைகளுக்கு கூட தொல்லை கொடுத்துள்ளார். சிலருக்கு பாலியல் ரீதியான தொல்லை, சிலருக்கு தொழில் ரீதியான தொல்லை, சிலருக்கு பர்ஸனல் ரீதியாகவும் தொல்லை கொடுத்திருப்பார். சில நடிகைகளின் இமேஜினை டேமேஜ் செய்யும்படி நடந்து கொள்வார். அவர் ஒரு சைக்கோ என்பதால் எல்லா வகையிலும் தொல்லை கொடுப்பார். இவ்வாறு அவர் பேசியுள்ளார். சுசித்ரா பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.