சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான 'முகதார் கா சிக்கந்தர்' படம் தமிழில் 'அமரகாவியம்' என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் அமிதாப்பச்சன் நடித்த கேரக்டரில் சிவாஜி நடித்தார். இந்தி படத்தில் அமிதாப் கேரக்டருக்கு நிகராக அதில் அம்ஜத்கான் நடித்த நெகட்டிவ் கேரக்டரும் பேசப்பட்டது.
இதனால் படம் ரீமேக் ஆகும்போது அப்போது சினிமாவில் நடிக்க தயாராகி கொண்டிருந்த சிவாஜி மகன் பிரபுவை இந்த படத்தின் மூலம் அறிமுகப்படுத்தலாம், அம்ஜத்கான் நடித்த கேரக்டரில் பிரபுவை நடிக்க வைக்கலாம், என்ற கருத்தை படத்தின் தயாரிப்பாளரும், இசை அமைப்பாளருமான எம்.எஸ்.விஸ்வநாதன் கூறினார். இந்த கருத்தை சிவாஜியிடம் சொன்னபோது “அதை அவன்கிட்டேயே கேளுங்க, நான் யார்கூட வேணாலும் நடிப்பேன்” என்று கூறிவிட்டார்.
பின்பு பிரபுவிடம் சொன்ன பிறகு ஹிந்திப் படத்தை பார்த்த பிறகு அதில் நடிக்க மறுத்து விட்டார். முதல் படத்திலேயே அப்பாவுடன் சண்டை போடுகிற, ரத்தகளறியாக இருக்கிற கேரக்டர் வேண்டாம் என்று கூறிவிட்டார். அதன் பிறகு அந்த கேரக்டரில் ஜெய் கணேஷ் நடித்தார்.
இந்த படத்தில் சிவாஜியுடன் ஸ்ரீப்ரியா, மாதவி, நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், சுகுமாரி, உள்ளிட்ட பலர் நடித்தனர். அமிர்தம் இயக்கி இருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.