அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
யூபோரியா பிலிக்ஸ் தயாரிப்பில் சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் உருவாகும் விமலின் 35வது திரைப்படம் 'பெல்லடோனா'. சூப்பர் நேச்சர் ஹாரர் படமாக உருவாகிறது. தேஜஸ்வினி ஷர்மா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக மணிப்பூரை சேர்ந்த மேக்சினா பவ்னம் நடிக்கிறார். வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்ய, ஏசி ஜான் பீட்டர் இசையமைக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் சந்தோஷ் பாபு முத்துசாமி கூறுகையில், "இந்த படம் விமலுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும். மிகவும் பிரமாண்டமாக படமாக்கப்பட்டு நன்றாக வந்துள்ளது. இந்த கதைக்கு ஏற்றார் போல் சக நடிகர்களும் அமைந்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மணிப்புரி உள்ளிட்ட 16 மொழிகளில் வெளியாக உள்ளது” என்றார்.