பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

மலையாளத்தில் வெகு சில படங்களே அதன் வெற்றிக்குப் பிறகு இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் மூன்றாம் பாகத்தை தொடுவது என்பது ரொம்பவே அரிது. அந்த வகையில் திரிஷ்யம் படத்தை தொடர்ந்து, நடிகர் ஜெயசூர்யா நடித்த ஆடு திரைப்படமும் ஏற்கனவே இரண்டு பாகங்களாக வெளியாகிவிட்டது.
கடந்த 2015ல் முதல் பாகமும் 2017ல இரண்டாம் பாகமும் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இதன் மூன்றாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு கடந்த சில வருடங்களாகவே இருந்து வந்தது. அதன் பிறகு படத்தின் இயக்குனர் மிதுன் மானுவேல் தாமஸ் மற்றும் தயாரிப்பாளர் விஜய் பாபு இருவரும் இந்த படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல மலையாள நடிகர் ஷைஜு குறூப் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, “இதுவரை மலையாள சினிமாவில் டைம் ட்ராவல் பற்றிய கதைகள் பெரிய அளவில் வந்ததில்லை. அந்த குறையை இந்த ஆடு 3 படம் போக்கும். இரண்டு விதமான காலகட்டங்களில் இந்த படம் உருவாகிறது” என்று ஒரு சஸ்பென்சை இப்போதே போட்டு உடைத்துள்ளார்.
டைம் ட்ராவல் கதை என்கிற செய்தி கசிந்துள்ளதால் ஆடு 3 திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.