நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

பிரபல ஹீரோக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு நடித்த படங்கள் காலம் கழித்து ரீ ரிலீஸ் செய்யப்படுவது வாடிக்கையாக மாறிவிட்டது. பெரும்பாலும் ஹீரோக்களின் பிறந்தநாள் அல்லது படம் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அதே தேதி என முக்கியமான ஒரு காரணத்தை சொல்லி ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது நினைத்த நேரத்தில் பிரபல ஹீரோக்களின் ரீ ரிலீஸ் படங்கள் செய்யப்படுவது புதிய ட்ரெண்ட் ஆக மாறிவிட்டது. தமிழில் அப்படி விஜய் படங்கள் அடிக்கடி ரீ ரிலீஸ் செய்யப்படுகின்றன. அதேபோல மலையாளத்தில் நடிகர் மோகன்லாலின் படங்கள் அடிக்கடி ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடந்த மாதம் மோகன்லாலின் சூப்பர் ஹிட் படமான சோட்டா மும்பை திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக மோகன்லால் நடிப்பில் தொடரும் என்கிற ஆக்ஷன் படம் வெளியாகி வரவேற்பை பெற்றதால் இந்த சோட்டா மும்பை திரைப்படத்திற்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதனை தொடர்ந்து சூட்டோடு சூடாக தற்போது மோகன்லால் 2001ல் நடித்து வெளியான ராவண பிரபு திரைப்படமும் 4கே டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இது குறித்து அறிவிப்பையும் பட வெளியீட்டாளர்கள் தற்போது அறிவித்துள்ளனர். இந்த படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக வசுந்தரா தாஸ் நடிக்க முக்கிய வேடத்தில் நெப்போலியன் நடித்திருந்தார். பிரபல இயக்குனர் ரஞ்சித் இயக்கியிருந்தார். விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.