பிளாஷ்பேக் : தியேட்டர்களை கோவிலாக மாற்றிய நந்தனார் | பள்ளி ஆசிரியர்களே என் உயர்வுக்கு காரணம் : பழைய நினைவுகளை பகிர்ந்து நடிகர் ரஜினி உருக்கம் | புரமோஷன் நிகழ்ச்சியில் உற்சாகத்தை அடக்க முடியாமல் துள்ளல் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் | தண்டேல் படக்குழுவினருக்கு மீன் கறி சமைத்து பரிமாறிய நாக சைதன்யா | லோக்கல் கேபிள் சேனலில் கேம் சேஞ்ஜர் படத்தை ஒளிபரப்பிய நபர் கைது | கவுதம் மேனன் டைரக்ஷனில் நடிக்கும் விஷால் | 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துல்கர் சல்மானை இயக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | சுப துக்க நிகழ்வுகளில் மம்முட்டியின் நிழல் போல தொடரும் இளம் நடிகர் | சிங்கம் பின்னணி இசை ஒலிக்க படப்பிடிப்புக்கு வந்த மலையாள நடிகர் | சுரேஷ்கோபி படத்தில் வில்லனாக இணைந்த கபீர் துகான் சிங் |
அடிக்கடி பாலியல் புகார்களை கிளப்பும் பாடகி சுசித்ரா, தற்போது மும்பையில் வசித்து வருகிறார். அவர் ஏற்கெனவே விஷால் மீது பல புகார்களை கூறியுள்ளார். தற்போது விஷால் உடல்நலக்குறைவாக இருக்கிறார். அண்மையில் நடந்த மத கஜ ராஜா பட விழாவில் விஷால் உடல் நலிந்த நிலையில் கைகள் நடுங்கும் நிலையில் கலந்து கொண்டார். இது வைரல் ஆனது. இந்த நிலையில் விஷால் மது பாட்டிலுடன் தவறான எண்ணத்தில் தன் வீட்டு கதவை தட்டியதாகவும், அதனால் எனக்கு மகிழ்ச்சி என்றும் வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:
விஷாலின் இந்த நிலைமையை பார்த்து பலர் வருத்தப்பட்டு இருப்பீர்கள். நான் விஷால் குறித்து பல வருடத்திற்கு முன் நடந்த விஷயத்தை கூறுகிறேன். எனது முன்னாள் கணவர் கார்த்திக் குமாருடன் நான் வாழ்ந்து கொண்டு இருந்தபோதுதான், இந்த சம்பவம் நடந்தது. அடிக்கடி கார்த்திக் குமார் ஏதாவது ஒரு காரணம் சொல்லிவிட்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி விடுவார். ஒருநாள் கார்த்திக் இல்லாதபோது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது.
கதவை திறந்து பார்த்தால் விஷால் கையில் ஒயின் பாட்டிலுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் போதையில் இருந்தார் என்பது அவரை பார்க்கும்போதே தெரிந்தது. உடனே கார்த்திக் குமார் இல்லையா என்று கேட்க, நான் இல்லை என்றேன். உடனே நான் உள்ளே வரவா என்று விஷால் கேட்டார். நான் 'நோ' என்று சொல்லிவிட்டேன். உடனே அவர் கையில் இருக்கும் ஒயின் பாட்டிலை என்னிடம் நீட்டி இதற்காகத்தான் வந்தேன் என்றார். கார்த்திக் குமார் இல்லாத நேரமாக பார்த்து வீட்டுக்கு வந்து எனக்கு ஒயின் பாட்டிலை கொடுத்தார்.
நான் அதை வாங்காமல் கவுதம் மேனன் அலுவலகத்தில்தான் கார்த்திக் குமார் இருக்கிறார், அங்கேபோய் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு கெட்டவார்த்தையால் அவனை திட்டினேன். அது அவன் காதில் விழாதது போல் என்ன சொன்னீங்க என்றதும், இங்கே ஒரு பூனை அடிக்கடி இப்படித்தான் தொல்லை பண்ணும் நீங்க போங்க என்று சொல்லிவிட்டு கதவை சாத்திவிட்டேன். அன்று தவறான எண்ணத்துடன் மது பாட்டிலை பிடித்த கைகள்தான் இன்று நடுங்கியபடி காட்சி தருகிறது. இது எனக்கு சந்தோஷம்தான். என்று சுசித்ரா கூறியுள்ளார்.