லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் |

மண்டேலா, மாவீரன் ஆகிய படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கின்றார். இது விக்ரமின் 63வது படமாக உருவாகிறது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. ஏற்கனவே இதில் கதாநாயகியாக நடிக்க சாய் பல்லவி உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சாய் பல்லவியின் கால்ஷீட் பிரச்சினையால் நடிக்கவில்லை. தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா மோகன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி இருவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில் ஸ்ரீநிதி ஷெட்டி ஏற்கனவே விக்ரம் உடன் கோப்ரா படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.