சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
நிலா நிலா ஓடிவா, சாதரங்கம், பிங்கர் பிரிண்ட்ஸ், மீட் கியூட் உள்ளிட்ட பல வெப் தொடர்களில் நடித்துள்ள சுனைனா தற்போது நடித்துள்ள தொடர் 'இன்ஸ்பெக்டர் ரிஷி'. இதில் அவர் காட்டிலாகா அதிகாரி 'காத்தி' என்ற கேரக்டரில் நடிக்கிறார். கதையின் நாயகனாக அதாவது இன்ஸ்பெக்டர் ரிஷியாக நவீன் சந்திரா நடிக்கிறார். இவர்களுடன் கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 10 எபிசோட்கள் கொண்ட இந்த தொடர் வருகிற 29ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
காட்டுக்குள் திடீர் திடீரென மர்ம சாவுகள் நடக்கிறது. இறந்து போனவர்களை சுற்றி பூச்சிகள் கூடுகட்டுகிறது. எதனால் இப்படி நடக்கிறது என்பதை போலீஸ் அதிகாரி நவீன் சந்திராவும், காட்டிலாகா அதிகாரி சுனைனாவும் இணைந்து கண்டுபிடிப்பதுதான் கதை. திகில், மர்மங்கள் நிறைந்த பேண்டசி தொடராக உருவாகி உள்ளது.
இதில் நடித்திருப்பது பற்றி சுனைனா கூறும்போது "இன்ஸ்பெக்டர் ரிஷி தொடரில் வன அதிகாரி காத்தியின் பாத்திரத்தில் நடித்தற்காக மகிழ்ச்சியடைகிறேன். கதாசிரியர்கள் எனது கதாபாத்திரத்தை மிக நுணுக்கமாக செதுக்கியிருக்கிறார்கள், மேலும் காத்தியின் குணாதிசயங்கள் என்னுடன் ஆழமாக எதிரொலித்தன. செட்டில் இருந்த ஆதரவான சூழல், திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் இணைந்து, காத்தியின் மென்மையான மற்றும் கடுமையான ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்த அனுமதித்தது. இயற்கை, அமைதி மற்றும் மர்மம் நிறைந்த ஒரு உலகத்திற்கு பார்வையாளர்களை வெற்றிகரமாக இட்டுச் செல்வோம் என்று நான் நம்புகிறேன்”என்றார்.