சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
ரெஜினா படத்திற்கு பிறகு தற்போது 'ராக்கெட் டிரைவர் என்ற படத்தில் நடித்திருக்கிறார் சுனைனா. விஷ்வத் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை ஸ்ரீராம் ஆனந்த சங்கர் இயக்கி உள்ளார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது பங்கேற்று வரும் சுனைனாவிடத்தில், லிவிங் டு கெதர் வாழ்க்கை குறித்து கேள்வியை மீடியாக்கள் எழுப்பியபோது கடும் கோபமாகிவிட்டார். அதையடுத்து, ''நான் எப்போதுமே சினிமாவை தான் காதலிக்கிறேன். யார் மீதும் எனக்கு காதல் இல்லை. மற்றபடி வெப் சீரிஸ் பார்ப்பதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறேன். அதன் மூலம் பல விஷயங்களை கற்றுக் கொண்டு வருகிறேன்,'' என்று தெரிவித்துள்ளார் சுனைனா.
மேலும், சமீபத்தில் ஒருவரின் கையைப் பிடித்தபடி லாக் என்று ஒரு புகைப்படத்தை அவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்த நிலையில், அது யூடியூபர் காலித் அல் அமேரியுடன் சுனைனா எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் என்று அப்போது ஊடகங்களில் செய்தி வெளியானது. அதோடு அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது அந்த செய்தியை மறுக்கும் வகையில் இப்படியொரு பதில் கொடுத்துள்ளார் சுனைனா.