'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறது. அதையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ள தனது 44வது படத்திலும் நடித்து முடித்து விட்ட சூர்யா, அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் நடிக்கிறார். இது குறித்து அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இந்த நிலையில் இந்த சூர்யா 45வது படத்திற்கு 'ஹிண்ட்' என டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க காஷ்மிரா பர்தேசி இடத்தில் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இவர் ஏற்கனவே தமிழில், சிவப்பு மஞ்சள் பச்சை, அன்பறிவு, பரம்பொருள், பிடி சார் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.