'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. டிசம்பர் மாதம் 6ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. 2021ம் ஆண்டு வெளிவந்த முதல் பாகத்தை விடவும் இந்த இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து அவ்வப்போது சில சர்ச்சையான செய்திகளும் வெளிவந்து கொண்டுதான் இருந்தது. தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை பிரம்மாஜி அவருடைய சமூக வலைத்தளத்தில் இயக்குனர் சுகுமார், பஹத் பாசில் ஆகியோருடன் இருக்கும் சில புகைப்படங்களைப் பகிர்ந்து படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.
படம் வெளியாக இன்னும் ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில் நேற்றுதான் படப்பிடிப்பை முடித்துள்ளார்கள் என்பது பலருக்கும் அதிர்ச்சியான ஆச்சரியமான தகவல்தான். ஏற்கெனவே படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை நடத்தி வருவதாகவும் சில விடுபட்ட காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடந்ததாகவும் சொல்கிறார்கள். விரைவில் படக்குழுவினர் புரமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்க உள்ளார்களாம்.