என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ,சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் வெளியாகின. தற்போது 'நட்சத்திரம் நகருகிறது' என்ற படத்தை இயக்கியுள்ளார். இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து நடிகர் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கமலின் 'விக்ரம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், கமல்ஹாசனை வைத்து மதுரை பின்னணியில் ஒரு படம் இயக்க எனக்கு ஆசையாக உள்ளது என்றார். மேலும் மதுரை என்றால் வேஷ்டி, சட்டை என்றில்லாமல் கோர்ட் ஷுட்டுடனும் வரலாம் எனதெரிவித்தார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலானது .