மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் 'டான்'. இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக முன்பதிவு மிகவும் குறைவாகவே இருந்தது. படம் வெளியான முதல் நாளில் கூட பல தியேட்டர்களில் அரங்கு நிறையவில்லை.
ஆனால், அதற்கடுத்த இரண்டு நாட்களில் நிலைமை மாறிவிட்டது. படத்திற்கான விமர்சனங்களும், படம் பார்த்த ரசிகர்களின் கருத்துக்களும் படத்திற்குப் பாசிட்டிவ்வாகப் பரவியதால் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பெரும்பாலான தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகள் நடைபெற்றுள்ளது.
முதல் நாளில் சுமாராக 9 கோடி, இரண்டாம் நாளில் 10 கோடி, மூன்றாம் நாளில் 11 கோடி என இப்படத்தின் வசூல் 3 நாட்களில் 30 கோடி கடந்திருக்கலாம் என கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது 1 முதல் 9 வரையிலான பள்ளி வகுப்புகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் தியேட்டர்களுக்கு மக்கள் குடும்பத்துடன் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதன் காரணமாக இந்த வாரமும் படம் நல்ல வசூலைத் தரும் என தியேட்டர்காரர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.