தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு | பிளாஷ்பேக் : அன்புள்ள ரஜினிகாந்த் | திரைப்பட கூட்டமைப்பின் துணை தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு | சீனு ராமசாமி மனைவியை பிரிவதாக அறிவிப்பு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் - சாய் பல்லவி கோபம் | என் ஓட்டுக்கு விஜய்க்கு தான் - ஆல்யா மானசா பேட்டி | காந்தாரா சாப்டர் 1 படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக ஜெயராம் | அல்லு அர்ஜுனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியானது | சூர்யா படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதன் படத்திற்கும் இசையமைக்கும் சாய் அபயங்கர் | ருக்மிணி வசந்த் பிறந்தநாள் : ‛ஏஸ்' முன்னோட்ட வீடியோ வெளியீடு |
தொண்ணூறுகளில் தென்னிந்திய அளவில் ஷோபனாவும், மலையாளத்தில் மஞ்சு வாரியரும் முன்னணி நடிகைகளாக வலம் வந்தனர். தற்போது ஷோபனா படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு நாட்டியத்தின் பக்கமே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அதேசமயம் மஞ்சு வாரியர் முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக இப்போதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ஷோபனாவும், மஞ்சுவாரியரும் நேரில் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படத்தை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ஷோபனா “இதமான கட்டிப்பிடி வரவேற்பில் இது முக்கியமான ஒன்று” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.