ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர். மோகன்லாலுடன் இதற்கு முன்பு 55 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தவர் ஷோபனா. அடுத்து 56வது படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்கள்.
தருண் மூர்த்தி இயக்கத்தில் உருவாக உள்ள 'எல் 360' படத்தில் இருவரும் இணைந்து நடிக்கப் போகிறார்கள். இப்படத்தில் நடிக்கப் போவது குறித்து நடிகை ஷோபனா வெளியிட்டுள்ள வீடியோவில், “சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மலையாளப் படத்தில் நடிக்க இருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. இது லால் அவர்களின் 360வது படம். அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் 56வது படம். இப்படத்தில் நடிக்க உற்சாகமாக இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்றும் நம்புகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
ஷோபனா கடைசியாக மலையாளத்தில் 2020ல் வெளிவந்த 'வரேனே அவஷ்யமுண்ட்' படத்தில் நடித்திருந்தார். நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கப் போகிறார். தமிழில் 2014ல் வெளிவந்த மோஷன் கேப்சரிங் படமான 'கோச்சடையான்' படத்தில்தான் கடைசியாக நடித்தார்.