மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
தமிழகத்தில் நேற்று நடந்த லோக்சபா தேர்தலில் சினிமா பிரபலங்கள் பலரும் அவரவர் ஓட்டுச்சாவடிக்குச் சென்று ஓட்டளித்தார்கள். ஆனால், சில சினிமா பிரபலங்கள் ஓட்டளிக்கச் செல்லவில்லை. சில படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படாமல் நடந்ததும் தெரிய வந்துள்ளது.
மணிரத்னம், சிலம்பரசன் 'தக்லைப்' படப்பிடிப்பில் இருப்பதால் அவர்கள் ஓட்டு அளிக்கவில்லை என்கிறார்கள். அது போல 'தி கோட்' படக்குழுவினர் ரஷ்யாவிலிருந்து திரும்பாத காரணத்தால் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் யாருமே ஓட்டளிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
விஜய்க்கு மட்டும் நேற்று ஓட்டளிக்க வசதியாக விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தார்களாம். அதேசமயம் படக்குழுவைச் சேர்ந்த வேறு யாருக்கும் ஓட்டளிக்க வசதியாக ஏன் விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஒரு அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கும் விஜய், அவர் ஓட்டளித்தால் மட்டும் என்று நினைக்காமல் மற்றவர்களும் ஜனநாயக கடமை ஆற்ற வசதியாக தயாரிப்பாளரை வலியுறுத்தி இருக்க வேண்டுமல்லவா என்கிறார்கள்.